வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015


வரவேற்போம் வாங்க!.......
நம்ம தாளவாடியில் தானியங்கி (ஆட்டோ) போக்குவரத்து பயணிகளுக்காக புதிய இயக்கம்.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.அரசு அனுமதி பெற்று 2015ஆகஸ்டு இந்த மாதம் முதல் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக ஆட்டோ போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.இதுவரை மலைப்பகுதியான தாளவாடியில் ஆட்டோ இயக்க அனுமதி இல்லாமல் இருந்தது.தற்போது பத்து புதிய ஆட்டோக்கள் வருகை தந்துள்ள நிலையில் இன்னும் கூடுதலாக ஐந்து ஆட்டோக்கள் வர உள்ளதாம். தாளவாடி மக்களுக்காக இனிதே வரவேற்கிறேன்.
பகிரப்பட்டுள்ள படம், தாளவாடி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பூஜை செய்த போது எடுத்த படம்.
லாரி?
முதலாளியின் முதலீடா?
வணிகரின் வருமானமா?
ஓட்டுநரின் சாதனைப்பொருளா?
பொறுமை கடலினும் பெரிது,
மனித உயிர் அதனினும் பெரிது..
இதை உணர்வது எப்போது?
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
வேதனையுடன் இந்த விபத்தை பதிவிடுகிறேன்.2015ஆகஸ்டு 20ந்தேதி இன்று காலை திம்பம் இரண்டாவது வளைவில் கோரமாக கிடக்கும் இந்த லாரியை நேரில் காணும் நிலை ஏற்பட்டது.
ஆண்டுதோறும் திம்பம் மலைப்பாதையில் இது போன்ற ஆயிரக்கணக்கான கொடூர விபத்துக்களும்,எண்ணற்ற உயிரிழப்புகளும்
கூடுதலாக வன விலங்குகளான சிறுத்தை போன்றவைகளுக்கும் பலியாகும் நிலையும் தொடர்கதையாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
அனைத்து தவறுகளுக்கும் தொண்ணூறு சதவீதம் மனித தவறுகளே..
முதலில் விபத்து பற்றிக் காண்போம்.
நாட்டின் முதுகெலும்பாக விளங்கி வரும் போக்குவரத்துத் தொழிலில் ஓட்டுநரின் அலட்சியமான எண்ணம்.பாதை பற்றிய தெளிவு இருந்தாலும் எதிர்பார்ப்பு இல்லாமலும்,எச்சரிக்கையில்லாமலும்,பாதையின் தன்மைக்கேற்ற வாகனம் இயக்கம் இல்லாத காரணத்தாலும்,
தினசரிச்சந்தைக்கு வெகு விரைவாக செல்ல வேண்டும்.என்ற அதிக இலாப எதிர்பார்ப்போடு உடன் பயணிக்கும் வியாபாரியின் ஆபத்தான செயல்பாடு,
அதாவது குறிப்பிட்ட சந்தைக்கு எவ்வளவு குறைவான நேரத்தில் வேகமாக சென்றடைய முடியுமோ அதற்கேற்ப அதிகமாக பேட்டா எனப்படும் ஊக்கத்தொகை கொடுப்பதாக கூறி அவசரப்படுத்துதல் காரணமாகவும்,
ஓட்டுநரும் அதிக வருமானத்திற்காக ஓய்வின்றி,உடல் நலம் குறைவானாலும் பணம்?பணம்? என்ற நோக்கத்தில் ஓட்டுவதாலும்,
சாலையின் குறிப்பாக மலைப்பாதையின் தன்மைக்கேற்ப இயற்கை சக்திகளுக்கு ஏற்ப இயக்குவதை,
சாலை விதிகளை அலட்சியப்படுத்திவிட்டு வேகமாக பயணித்து இவ்வாறு நொறுங்கிப்போகிறார்கள்.
திம்பத்திலிருந்து பண்ணாரி அம்மன் கோவில் சோதனைச்சாவடி வரை எட்டு கி.மீ. தூரத்தை பயணிக்க ஏறும்போது எத்தனை நேரம் ஆகும்?இறங்கும்போது எத்தனை நேரம் ஆகும்?என கணக்கிட்டுப்பார்த்தாலாவது ,
அதாவது நடந்து செல்லும் வேகத்தில் சென்றால்கூட கூடுதலாக பத்துநிமிடங்களே அதிகமாக செலவாகும்.இங்கு தாமதமாகும் நேர இழப்பை சமதளத்தில் சரிக்கட்டலாமே!......... மாறாக சாலையில் விபத்து ஏற்பட்டால் எத்தனை மணிநேரம் பாழாகிறது?.யார் யாருக்கு எத்தனை முதலீடு பாழாகிறது?. குறைவான சம்பளம் கொடுக்க முடிவெடுத்து முதலீட்டையே இழக்கலாமா? அதேபோல போதிய பயிற்சியும் வாகன அறிவும்,சாலையின் தன்மையும் அறியாதவர்களை பணிக்கு அமர்த்தும் முதலாளிகளும் சிந்தனை செய்ய வேண்டும்.
ஓட்டுநர்களும் பொறுமை கடைப்பிடித்து உரிய கியரில் போக்குவரத்து செய்து தானும் பாதுகாப்பாக பயணித்து மற்றவர்களையும் பாதுகாப்பாக பயணிக்க உதவலாமே கவனமாக உரிய வேகத்தில் அளவான பாரத்தை ஏற்றி வாகனத்தை இயக்கலாமே!..
விபத்து ஏற்பட்டால்,
(1)லாரி முதலாளி கடனாளியாகி தற்கொலை செய்யும் பரிதாப நிலை,
(2)ஓட்டுநர் உடல் உறுப்பு இழந்தோ,உயிர் இழந்தோ,இதனால் குடும்பத்தார் படும் வேதனை சொல்லி மாளாது.
அதுபோல இந்த வாகன ஓட்டியால் மற்ற போக்குவரத்து வாகனங்களுக்கு விபத்தில் சிக்குண்டால் ஏற்படும் இழப்புகளோ,இதனால் போக்குவரத்து தடையால் ஏற்படும் நேர இழப்புகளோ,பயணிகள் போக்குவரத்துக்கு ஏற்படும் ஈடுகட்ட முடியாத இழப்புகளோ,
நாட்டின் பொருளாதாரத்திற்கே பெரும் இழப்பு ஏற்படுகிறது.
(3)பணம்,பணம் என பேயாக அலையும் சில வியாபாரிகளுக்கு இதனால் வணிகமே பாழாகிப்போகும் நிலை.
(4)விபத்திற்கு ஆளாகிய வணிகர்களுக்கு எத்தனை அலைச்சல்,இழப்பு,நேர விரயம்..இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவே மறந்துவிடுகிறார்கள்.
(5) சிறுத்தை,புலி,கழுதைப்புலி, யானை,கரடி,செந்நாய்க்கூட்டம்,என வனவிலங்குகள் அதற்குரிமை உள்ள வானகத்தில் வசிக்கின்றன.அதையெல்லாம் சிந்திக்காமல் வனவிலங்குகளின் வசிப்பிடத்தை அபகரித்து,ஆக்கிரமித்துக்கொண்டு, பயணிப்பதை சிறிதும் யோசிக்காமல், பொது மக்கள் நலன் கருதி,
வனத்துறை அறிவிக்கும் எச்சரிக்கைப்பலகையின் அருகில்தான் சிறுத்தைக்கு நானே எமன்? என்று போஸ் கொடுக்கிறார்கள்.இவர்களை என்ன செய்வது?

தாளவாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்-