நம் தாய்மொழியை போற்றுவோம்.கூடுதலாக தேசியமொழிகளையும்,பன்னாட்டு மொழியினையும் படித்து உயர்வோம்..இன்றைய உலகம் அறிவியல் வளர்ச்சியால் கிராமமாக சுருங்கிவிட்டதால் தொடர்புக்காக பலமொழிகளைப் படிப்போம்...
அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம்.இன்று உலக தாய்மொழி தினம்..
உலகில் பல வகையான மொழிகள் உள்ளன. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.
அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய வணக்கம்.இன்று உலக தாய்மொழி தினம்..
ஒருவொருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் மொழி
அவசியம். உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம்,
சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி,
தாய்மொழி என வகைப்படுத்தப்படுகிறது.
உலகில் பல வகையான மொழிகள் உள்ளன. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.
மூன்று மொழி :
தாய்மொழி,
தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள்
ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டும், மொழிகளுக்காக சண்டைகள் கூடாது என மொழி
ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து
மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த
மொழியையும் அழிக்கக் கூடாது. 'ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும்,
வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை
உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது.
எப்படி உருவானது:
இந்தியாவிடமிருந்து
சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில் 'உருது மொழி' அங்கீகரிக்கப்பட்ட
மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது
வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும்
என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை தெரிவித்தனர். 1952, பிப்., 21ம்
தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலைக்கழக
மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் நால்வர் போலீசாரால் சுட்டுக்
கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக யுனஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டு
இத்தினத்தை உருவாக்கியது.